
கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி அன்று, டெல்லி மேற்கு மாவட்டம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு, ஒரு போதை வியாபாரி, தொடபுர் கிராமம், சாஸ்திரி மார்க் டி பாயிண்ட், இந்தர்பூரி க்கு சிலரை சந்திக்க வருவார் என்ற ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள் ஒரு குழு அமைத்து, தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த நபர், யார் என்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அடையாளம் காணப்பட்டதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 31 வயதான போஜ்புரி பாடகர் வினய் சர்மா என்பது தெரிய வந்தது. இவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரிடமிருந்து 21.508 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது இந்தர்புரி காவல் நிலையத்தில் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.