சடலங்களை எரியூட்டி அஸ்தியை தபாலில் வழங்கும் தபால்துறை ...

சடலங்களை எரியூட்டி அஸ்தியை தபாலில் வழங்கும் தபால்துறை ...

Published on

உத்தரபிரதேசத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை முறைப்படி எரியூட்டி அந்த அஸ்தியை சம்பந்தப்பட்டோருக்கு வழங்கும் பணியில் தபால் துறை ஈடுபட்டுள்ளது.

கொரோனா 2வது அலை பரவியபோது, நோயின் தீவிரம் காரணமாக உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலர் உயிரிழந்தனர்.  ஆனால் அந்த சடலங்கள், முறையாக எரிக்கப்படாமல் கங்கை நதியில் வீசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை முறைப்படி எரிக்க, அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் உடல்களை முறைப்படி எரியூட்டி அந்த அஸ்தியை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க தபால் துறை முன்வந்துள்ளது.

இதற்கென ஓம் திவ்ய தர்ஷன் அமைப்புடன் கைகோர்த்துள்ள தபால் துறை, வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா உள்ளிட்ட இடங்களில் இறப்போரின் சடலங்களை முறைப்படி எரியூட்டி அஸ்தியை தபால் மூலம் வழங்கி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com