விலை நிர்ணயம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி!!

விலை நிர்ணயம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி!!
Published on: 
Updated on: 
1 min read

மூக்கு வழியாக வழங்கப்படும் பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசி இன்கோவாக்சின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூக்கு வழியாக வழங்கப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசியான இன்கோவாக்சினின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸின் விலை ரூ.800 ஆக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர, ஐந்து சதவீத ஜிஎஸ்டியும் அதனுடன் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் தற்போது இந்த தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை சுமார் 1000 ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் தடுப்பூசியான இன்கோவாக்சின் கடந்த வாரம் தான் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com