இந்தியா
'ரோஜ்கார் மேளா' திட்டம்...71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி!
மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையிலான 'ரோஜ்கார் மேளா' என்ற வேலை வாய்ப்பு திருவிழாவை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதுவரை இந்த திட்டம் மூலம் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில், மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மேலும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பணி ஆணைகளை வழங்க உள்ளார்.
நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அஞ்சல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளன