
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தமிழ்நாடு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மரியாதை செலுத்தியுள்ளார் மோடி.