பிரபலமான உலக  தலைவர்களில் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்...

உலக  தலைவர்களில் மிகவும் பிரபலமானவராக பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபலமான உலக  தலைவர்களில்  பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்...
Published on
Updated on
1 min read

உலக தலைவர்களில் மிகவும் பிரபலமானவரை கண்டறிய ‘த மார்னிங் கன்சல்ட்’ என்ற அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதற்கென உலகளவில் மக்களால் நன்கு அறியப்பட்ட ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் தலைவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 70 சதவீதம் மக்களால் விரும்பப்பட்ட பிரபலமாக பிரதமர் மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்களை விட மிகவும் பிரபலமாகி இருப்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பு பட்டியல் படி, 2வது இடத்தில் மெக்ஸிக்கோ அதிபர் ஆன்ட்ரீவ்ஸ் மானுவேலி லோபெஸும், 3-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ திராகியும் உள்ளனர். மேலும் ஜோ பைடன் 5-வது இடத்திலும், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ 7-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பரவல் இரண்டாவது அலை உச்சம் அடைந்தபோது பிரதமர் மோடியின் விரும்பதகாத மதிப்பீடு உச்சத்தை அடைந்தது. எனினும், இந்தியாவில் கொரோனா நிலவரம் கட்டுக்குள் வந்த பிறகு, பிரதமர் மோடியின் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளதாக The Morning Consult கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com