
2022 ஆம் ஆண்டில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் தற்போது நடைபெற்று வரும் கண்காட்சியை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சாதனைகளை பிரதிபலிக்கும் விதமாக 4 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று துபாய் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தற்போது வரை 4 லட்சத்திகும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். விண்வெளி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு, சகிப்புத்தன்மை, பொன்விழா, அறிவு மற்றும் கற்றல், ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் துபாய் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.