பிரதமர் TO அமைச்சர் வரை... 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவிநீக்கமா? புதிய மசோதா சொல்வது இதுதான்!

கூட்டணி ஆட்சிகளை சீர்குலைக்கும் என்றும் தங்களது பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றனர்
30 நாட்கள் சிறையில் இருந்தால்
Published on
Updated on
1 min read

கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் சர்ச்சைக்குரிய 130வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அவைக் குழு ஒன்று அதன் அறிக்கையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது ஒரு வழக்கமான நடைமுறையாகும். அதன் அடிப்படையில் ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு, ஜூலை 17 அன்று தனது அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதனைப் பரிசீலிப்பதற்காக, பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடுமையான குற்றங்களுக்காக பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது பிற அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவர்களைத் தானாகவே பதவியிலிருந்து நீக்குவதற்கு பரிந்துரைக்கும் சர்ச்சைக்குரிய  இந்த மசோதாவிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த மசோதா ஏற்றுகொள்ள வாய்ப்பிருந்தாலும், அரசியல் பழிவாங்குதலுக்காக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிசெய்யும் எச்சரிக்கைக் குறிப்புகள் அதில் இருக்கலாம் என தெரிகிறது. 

ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரில் மசோதா பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் தங்களுது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் அரசாங்கங்களை சீர்குலைக்கும் கருவி என்றும், கூட்டணி ஆட்சிகளை சீர்குலைக்கும் என்றும் தங்களது பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் விலகி.

இந்த மசோதாவிற்கான அறிக்கை இந்த வாரம், ஜூலை 17 தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட மசோதாவில் பதவி நீக்கம் என்பதற்கு பதில் தற்காலிக இடைநீக்கம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, கடும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்ட நடவடிக்கைகளின் முடிவு வரும் வரை, நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யப்படாமல், தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்க உள்ளதாக தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com