மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி முதல்வர் போராட்டம்!

கல்லூரியின் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும், மாணவர்களின் பிரச்சனைகள் குறித்தும் கல்லூரியின் முதல்வர் என்ற முறையில் அரசுக்கு பல முறை கடிதம் கொடுத்துள்ளேன்.
மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி முதல்வர் போராட்டம்!
Published on
Updated on
1 min read

தாகூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து கல்லூரியின் முதல்வர் கடந்த 99 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று முதல்  உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்

புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தர வேண்டும், காலியாக உள்ள பேராசிரியர்கள் பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியின் முதல்வர் சசிகாந்தாஸ் கடந்த 99 நாட்களாக அவரது அலுவலகத்தில் தரையில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

100 ஆவது நாள்

இந்நிலையில் 100 ஆவது நாளாக இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, கல்லூரியின் உள்ள பல்வேறு பிரச்சனைகளையும், மாணவர்களின் பிரச்சனைகள் குறித்தும் கல்லூரியின் முதல்வர் என்ற முறையில் அரசுக்கு பல முறை கடிதம் கொடுத்து தெரியபடுத்தியும் அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை கண்டித்து கடந்த 99 நாட்களாக தனது அலுவலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

அடுத்தகட்ட போராட்டம் கல்லூரியில்

அப்போது கல்லூரியின் எந்த ஒரு பணியும் பாதிக்காதவாறு பணியாற்றியதாகவும் தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் அரசு இதற்கு பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் கல்லூரி வாயிலில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் கூறினார். இதற்கும் அரசு எவ்வித பதில் அளிக்காமல் இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com