அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.300 மானியம்...முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.300 மானியம்...முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல்!

Published on

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 300 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரியின் 2023-2024ம் ஆண்டுக்கான 11ஆயிரத்து 600கோடி ரூபாய் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 300 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம்,  அரசு பேருந்தில் பட்டியலின பெண்களுக்கு இலவச பயணம், புதிதாக 50 இ பேருந்துகள் வாங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

மேலும்  தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும் என்றும், 70 முதல் 79 வயதுடைய மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை 3 ஆயிரத்தில் இருந்து 3ஆயிரத்து 500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுக்காக ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com