அப்பாடா.. பதவி ஏற்றுவிட்டோம்... நிம்மதி பெருமூச்சு விடும் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள்!!

அப்பாடா.. பதவி ஏற்றுவிட்டோம்... நிம்மதி பெருமூச்சு விடும் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள்!!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவி ஏற்று கொண்டனர்.  

நடந்துமுடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களைப் பிடித்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களைக் கைப்பற்றினர். இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் என்பவர் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com