பஞ்சாப் தேர்தல் வெற்றி பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமிர்தசரஸில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பஞ்சாப் தேர்தல் வெற்றி பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!
Published on
Updated on
1 min read

117 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில், 92 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

இதனையடுத்து, அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ஆட்சி அழைக்க அழைப்புவிடுக்குமாறு முதலமைச்சராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான் கோரிக்கைவிடுத்தார். சுதந்திர போராட்டத் தியாகி பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலானில், வரும் 16-ம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாபெரும் பேரணி உள்ளிட்ட வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று அமிர்தசரஸ் வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பகவந்த் மான் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பொற்கோவிலுக்கு சென்ற கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிப்பேரணியில் பங்கேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com