மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு… மத்திய அமைச்சரானார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்…

மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.  
மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு… மத்திய அமைச்சரானார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்…
Published on
Updated on
1 min read

மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் 81 உறுப்பினர்களை உள்ளடக்கிய அவரது மத்திய அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. 53 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பு வகித்து வந்தனர். இதில் முக்கிய அமைச்சர்கள் சிலர், கூடுதலாக 4 துறைகளை கவனித்து வந்தனர். இதன் காரணமாக மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். இன்று  மாலை 6 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com