5 மாநில சட்டமன்ற தேர்தல் எதிரொலி : தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கம்!!

தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் எதிரொலி : தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் நீக்கம்!!
Published on
Updated on
1 min read

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் 5 மாநில சட்டசபை தேர்தல், பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவின் தளத்தில் இதற்கான மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தல் நடத்தப்படும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. அத்துடன் நான்கு மாநிலங்களில் மோடியின் படத்தை நீக்கிய தடுப்பூசி சான்றிதழ்களும் வெளியிடப்பட்டன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com