டெல்லியில் மின் தட்டுப்பாடு அபாயம் - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்...  

நிலக்கரி தட்டுப்பாடு நீடிக்கிறது என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  
டெல்லியில் மின் தட்டுப்பாடு அபாயம் - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்...   
Published on
Updated on
1 min read

இது அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் தலைநகர் டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் தலைநகர் டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதுபோன்ற ஒரு சூழலைத் தவிர்க்க தனது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 டெல்லிக்கு மின் விநியோகம் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நிலக்கரி தட்டுப்பாடு நீடிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com