பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவ்வழியே சென்ற லாரி, பக்தர்கள் மீது மோதியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு...