''கழிவறையில் ரகசிய கேமரா, வதந்திகளை நம்ப வேண்டாம்'' - குஷ்பு சுந்தர்.

''கழிவறையில் ரகசிய கேமரா, வதந்திகளை நம்ப வேண்டாம்'' -  குஷ்பு சுந்தர்.
Published on
Updated on
2 min read

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என தேசிய மகளிர் ஆணைய  உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து  பாரா மெடிக்கல் கல்லூரியில் விசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கல்லூரியின் கழிவறையில்  ரகசிய கேமரா இருப்பதாக வலம் வரும்  செய்திகளில் காவல்துறையின் அறிக்கையைத் தவிர, வேறு எந்த செய்திகளுக்கும் மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என தெரிவித்தார். 

கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.  விசாரணை தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட போன்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, பாரா மெடிக்கல் காலேஜில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது 

”  நான் விசாரணையைத் தொடங்கியுள்ளேன், எந்த தகவலையும் வெளியிட முடியாது.  உள்ளே என்ன பேசப்பட்டது என்பதை இப்போது வெளியிட முடியாது என்றும் இறுதி முடிவு எதுவும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 கல்லூரியில் ஆதாரம் கிடைத்ததா என்று சொல்ல முடியாது, காவல்துறையின் அறிக்கையைத் தவிர, வேறு எந்த ஊடங்களுக்கும் மக்கள் செவிசாய்க்க வேண்டாம்.  தகவல்களைச் சேகரிக்க இன்னும் சிறிது கால அவகாசம் தேவை.  ஒவ்வொருவரும் பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 வதந்திகள், வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம், சரியான தகவல்களை நாங்களே தருவோம்.  சம்பந்தப்பட்ட போன்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  இதைத் தவிர வேறு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது.

 நம் வேலையைச் செய்வோம்.  நாங்கள் எங்கு சென்றாலும் யாருடன் பேசுகிறோம் என்பதை பின்தொடராதீர்கள், தேசிய மகளிர் ஆணையம் சார்பாக நான் இந்தஇடத்தில் இருக்கிறேன், எங்கள் வேலையைச் செய்வோம், இந்த நேரத்தில் என்னால் உங்களுக்கு எந்தத் தகவலையும் கொடுக்க முடியாது.  "தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளதால் நான் இங்கு வந்துள்ளேன். பல குற்றச்சாட்டுகள் இருக்கலாம், அதன் அடிப்படையில் நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாது. உங்களுக்கு எந்த முக்கிய செய்தியும் கொடுக்க நான் வரவில்லை," என்று அவர் கூறினார்.

இது மாணவிகள் சம்பந்தப்பட்ட விஷயம், பொறுத்திருங்கள், இது இரண்டு நிமிட நூடுல்ஸ் அல்ல, ரெஸ்ட்ரூமில்  ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது.  என்ற வதந்தியை நம்ப வேண்டாம்.  பரவும் பொய்யான வீடியோக்களை நம்ப வேண்டாம், ரகசிய கேமரா இல்லாத கல்வி மையம் இது, காவல்துறையினருடன் இணைந்து தகவல்களை சேகரித்து வருகிறோம், காவல்துறையின் ஒத்துழைப்புடன் எங்களது விசாரணை தொடரும்”,   என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com