பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழு அதிவேக ரயில் தடங்கள்.. இந்திய ரயில் சேவையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற சிறப்பு திட்டம்!

சரக்கு போக்குவரத்தை சுற்றுச்சூழல் நட்பு முறையில் விரைவுபடுத்தி, தொழில்துறை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்...
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழு அதிவேக ரயில் தடங்கள்.. இந்திய ரயில் சேவையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற சிறப்பு திட்டம்!
Published on
Updated on
1 min read

இந்தியாவின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளத்தை அமைக்கவும் 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் நாட்டின் ரயில்வே சேவையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில முக்கிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய டெடிகேட்டட் ஃப்ரெயிட் காரிடார் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கிழக்கு பகுதியான தான்குனி முதல் மேற்கு பகுதியான சூரத் வரை நீண்டு செல்லும். இது சரக்கு போக்குவரத்தை சுற்றுச்சூழல் நட்பு முறையில் விரைவுபடுத்தி, தொழில்துறை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் மிகப் பெரிய முன்னேற்றமாக, 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் வளர்ச்சி இணைப்புகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, தொழில்நுட்பம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும்.

ஏழு அதிவேக ரயில் தடங்கள்

  • சென்னை- பெங்களூரு

  • ஹைதராபாத் - சென்னை

  • டெல்லி - வாரணாசி

  • வாரணாசி - சிலிகுரி

  • புனே- ஹைதராபாத்

  • மும்பை - புனே

இந்தத் திட்டங்கள் தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களை இணைக்கும் ஒரு அதிவேக ரயில் சேவையாக அமையுள்ளது. இந்த திட்டமானது நமது நாட்டின் போக்குவது சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com