தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார்.
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் சுயசரிதை விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தான் எழுதிய ‘லோக் மாஜே சங்கதி’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இதையும் படிக்க : காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன...?
தொடர்ந்து பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், ஆனால் அரசியலில் இருந்து விலகும் திட்டம் இல்லை எனவும், அதேபோல் பொதுவாழ்க்கையிலிருந்தும் ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அதிரடியான அறிவிப்பை அறிவித்தார்.
சரத் பவாரின் இந்தத் திடீர் முடிவு கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தொண்டர்கள் சரத் பவாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் நான்கு முறை முதலமைச்சராக இருந்த சரத்பவாரின் இந்த முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.