இன்று முதல் ஷீரடி சாய்பாபா கோவில் திறப்பு

மகாராஷ்டிராவில் பிரபல ஷீரடி சாய்பாபா கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஷீரடி சாய்பாபா கோவில் திறப்பு
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் பிரபல ஷீரடி சாய்பாபா கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்து 150 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதிகாலை முதலே பக்தர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு படையெடுத்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com