பாஜக-சிவசேனா இடையேயான உறவை புதுப்பிக்கும் தனது விருப்பத்தை மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் நட்பு கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சேனா மற்றும் பாஜக ஒருபோதும் எதிரிகள் அல்ல நாங்கள் நண்பர்களே என பதிலளித்தார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தக்க சமயத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.