குற்றமற்றவராக தன்னை நிரூபிப்பாரா?சித்திக் கப்பான்...!

குற்றமற்றவராக தன்னை நிரூபிப்பாரா?சித்திக் கப்பான்...!
Published on
Updated on
1 min read

ஹத்ரஸ் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பழங்குடியின பெண்:

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ரசில், பழங்குடிப் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு அந்த 4 பேரும் அப்பெண்ணின் நாக்கை அறுத்து, படுகொலை செய்தனர்.

இரவோடு இரவாக தகனம்:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணின் உடலை மீட்டு, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துவிட்டார். இதனால் இரவோடு இரவாக பெண்ணின் உடலை காவல் துறையினர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பத்திரிக்கையாளர் கைது:

இந்நிலையில், இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்து உத்தரப்பிரதேச அரசு கூறும்போது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் இணைந்து சித்திக் கப்பான் சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்ற வந்தார். ஆகையால் அவர் கைது செய்யப்பட்டு, தேசதுரோக சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அலகாபாத் நீதிமன்றம்:

இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், சித்திக்கின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்:

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சித்திக் காப்பான் மனுத்தாக்கல் செய்தார். தற்போது, இம்மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது. விசாரணையில், எப்படி பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படும், நீதிபதி எப்படியான முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com