
நாடு முழுவதும் 577 குழந்தைகள் கொரோனாவால் அனாதைகளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் 577 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு முகாம்களில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அத்தகைய குழந்தைகளுக்கு ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில், தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் குழு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.