“இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்” - திருமணம் ரத்து என மனவேதனையுடன் ஸ்டோரி போட்ட ஸ்மிருதி மந்தனா!

மெஹந்தி நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் என பலாஷுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருந்தார்...
“இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்” - திருமணம் ரத்து என மனவேதனையுடன் ஸ்டோரி போட்ட ஸ்மிருதி மந்தனா!
Published on
Updated on
2 min read

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் பிரபல கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவிற்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் மூச்சலுக்கும் கடந்த (நவ 23) ஆம் தேதி சங்லியில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும் மெஹந்தி நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து திருமணத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் அதிகாலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தையான ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தனத்தையின் உடல்நலம் குறித்து கவலையில் இருந்த ஸ்மிருதிக்கு மேலும் மன வேதனை அளிக்கும் வகையில் அவரது காதலர் பலாஷ் மூச்சலுக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டது.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஸ்மிருதி மைந்தனை அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது காதலர் தனக்கு ப்ரபோஸ் செய்த வீடியோ, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் என பலாஷுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருந்தார். மேலும் இதன் காரணமாக அவரது திருமணம் தள்ளி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இருப்பினும் நெட்டிசன்கள் பலர் “ஸ்மிருதி மந்தனா எதற்காக அவரது காதலருடனான புகைப்படங்களை நீக்கிவிட்டார்? திருமணம் நின்றுவிட்டதா?” என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் “கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கை பற்றி ஏராளமான தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நேரத்தில் நான் பேச வேண்டியது முக்கியம் என உணர்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட வாழ்க்கை விரும்பும் நபர், அதை அப்படியே தொடர விரும்புகிறேன்.

ஆனால் ஒன்றை தெளிவாகச் சொல்ல வேண்டும் எனது திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன், நீங்களும் அப்படியே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டான இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்களுக்கு தேவையான இடைவெளியையும் நேரத்தையும் தந்து, நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் முன்னேற அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம்மையெல்லாம் ஒரு உயர்ந்த நோக்கம் வழிநடத்துகிறது என்று நம்புகிறேன். இந்தியாவை உலகின் உயர்ந்த தளத்தில் பிரதிநிதித்துவபடுத்துவதே எனது நோக்கம். முடிந்தவரை இந்தியாவிற்காக விளையாடி, கோப்பைகளை வென்று தர வேண்டும் என்பதே என் இலக்கு. அதுவே என்றென்றும் என் குறிக்கோளாக இருக்கும்.உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. இனி முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com