வாக்கு மையத்திற்குள் நுழைந்த சோனு சூட்.. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்! என்ன காரணம்?

உத்தரபிரதேசத்தில் 59 தொகுகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதே நேரத்தில் பஞ்சாப்பில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
வாக்கு மையத்திற்குள் நுழைந்த சோனு சூட்.. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்! என்ன காரணம்?
Published on: 
Updated on: 
1 min read

இந்த தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், காங்கிரஸ் கட்சி சார்பாக மொகா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இந்நிலையில், நடிகர் சோனு சூட், வாக்கு மையம் ஒன்றின்றுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
 


அப்போது, காரில் வந்த அவரை உடனே அதிகாரிகள் திருப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் மொகா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் சிங் கூறியுள்ளார்.
 


மேலும் இது குறித்து சோனு ஷூட் கூறியது, தேர்தல் முறையாக நடைபெறுகிறதா? என்பதை உறுதி செய்வது எங்களது கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தது, என்று நடிகர் சூட் கூறினார். இப்போது நாங்கள் வீட்டில் இருக்கிறோம். இருப்பினும் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com