சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்...! இன்று முதல் இயக்கம்...!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்...! இன்று முதல் இயக்கம்...!
Published on
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக கோவை வழியாக சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண ஒவ்வொரு ஆண்டும்  தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பக்தர்களின் வசதிக்காக, கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  

அதன்படி, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. செகந்திராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் இன்று மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புறப்பட்டு நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக நாளை பிற்பகல் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் அங்கிருந்து ஈரோடு, கோவை, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக இரவு 9 மணிக்கு கோட்டயம் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com