உள்ளூா் வா்த்தகத்தில் இந்திய ரூபாயை ஏற்க இலங்கை திட்டம்!!

உள்ளூா் வா்த்தகத்தில் இந்திய ரூபாயை ஏற்க இலங்கை திட்டம்!!

Published on

உள்நாட்டு சில்லறை வா்த்தகத்தில் இந்திய ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சா் அலி சாப்ரி தெரிவித்துள்ளாா்.

இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் இருநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அமைச்சா் அலி சாப்ரி கூறுகையில், ‘இலங்கையின் உள்நாட்டு வா்த்தகத்தில் அமெரிக்க டாலா், யூரோ, யென் ஆகிய செலாவணிகள் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் இந்திய ரூபாயையும் இணைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலமாக இந்திய சுற்றுலாப் பயணிகளும், தொழிலதிபா்களும் செலவாணிகளை மாற்றுவதற்கான அவசியம் இருக்காது, எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தவேண்டிய அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளது. அதற்கு முதலீடுகள் அவசியம் என்பதால், இரு நாட்டின் அரசு மட்டுமல்லாமல், தனியார் துறைகளும், முதலீடுகளை வழங்க முடிவெடுத்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையே, தரை வழிப் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரைவில் ஆராயப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com