பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அமைச்சர்....எதற்காக?!!!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அமைச்சர்....எதற்காக?!!!
Published on
Updated on
1 min read

வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இக்கட்டான தருணங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே கொழும்புக்கு வருவதன் முதன்மையான நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பாக எரிசக்தி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அதிக முதலீட்டை இந்தியா ஊக்குவிக்கும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்திய சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து இலங்கை மீது நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்திய சுற்றுலாப் பயணிகளை RuPay பணம் செலுத்தி UPI முறையைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் இதை மேலும் மேம்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார். 

இலங்கை அமைச்சர்:

அவரை தொடர்ந்து பேசிய இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி “அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து பெற்ற 4 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியினால் எங்களால் சிலவற்றை சாதிக்க முடிந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார் அலி சப்ரி.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com