கொரோனா:  10 %-க்கும்  அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை போடுங்க!

கொரோனா: 10 %-க்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை போடுங்க!

10 சதவீதத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Published on

10 சதவீதத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய அளவில் 5 சதவீதத்துக்குள் இருந்தாலும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இது 10 சதவீதத்தைத் தாண்டி இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. ஜூன் 21-27 தேதிகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வீழ்ச்சி அடைந்து வருவதால், மாவட்ட அளவிலும், துணை மாவட்ட அளவிலும் நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து கடுமையான கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மாநிலம் முழுவதும் நெகிழ்வுத்தன்மையையும், தளர்வுகளையும் அனுமதிக்கிறபோது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com