குற்றம் செய்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்...அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

குற்றம் செய்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்...அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!
Published on
Updated on
1 min read

டெல்லியில் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. 

நீதிக்கேட்டு முற்றுகை:

டெல்லி சுல்தான்புரி பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில், அந்த பெண் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டார்.  இதையடுத்து இந்த விபத்துக்கு காரணமான 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி சுல்தான்புரி காவல் நிலையம் முன்பு ஒன்று திரண்ட பொதுமக்கள், ஆம் ஆத்மி எம்எல்.ஏவின் காரை முற்றுகையிட்டனர்.

போர்க்களமாக மாறிய ஆளுநர் மாளிகை:

இந்நிலையில், துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆளுநர் பதவியில் இருந்து விலகக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தடுப்புகளை மீறி அவர்கள் ஆளுநர் மாளிகையில் நுழைய முயன்றதால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்கார்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.

தூக்கிலிட வலியுறுத்தல்:

இதனிடையே, இளம் பெண் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com