”இதுபோன்ற சுதந்திரம் பாகிஸ்தானில் இல்லை...” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்!!!

”இதுபோன்ற சுதந்திரம் பாகிஸ்தானில் இல்லை...” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல்!!!
Published on
Updated on
1 min read

காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பிடிப்பதும், அரசின் உயர் பதவிகளை எட்டுவதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். 

ரிஷி சுனக்:

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் குறித்து இங்கிலாந்தில் பேசப்படுவதைப் போலவே அதிக அளவு இந்தியாவிலும் பேசப்படுகிறது.  இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆச்சரியம்:

இதற்கிடையில், ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் இந்தியாவின் ஜனநாயகத்தை பாராட்டியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக்கை நியமித்திருப்பது பாகிஸ்தானுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் என்றும், அங்கு சிறுபான்மையினர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

பாஜக- காங்கிரஸ் வார்த்தை போர்:

ரிஷி சுனக் பதவியேற்றதில் இருந்து பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், சசி தரூர் ஆகியோர் பெரும்பான்மைவாதத்தை குறித்து விமர்சித்து வரும் நிலையில், பாஜக தலைவர்கள் மன்மோகன் சிங், அப்துல் கலாம் மற்றும் த்ரௌபதி முர்மு ஆகியோரை உதாரணம் காட்டி காங்கிரஸ் தலைவர்களை வாயடைக்க முயன்று வருகின்றனர் பாஜக.

இந்தியாவில் மட்டுமே சாத்தியம்:
 
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல் கூறுகையில், ''இஸ்லாமிய நாடுகள் எனப்படும் வேறு எந்த நாட்டிலும் இந்திய முஸ்லிம்களுக்கு இதுபோன்ற சுதந்திரம் கிடைப்பது சாத்தியமில்லை.  ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் இளைஞன் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெறுவதும், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு வருவதும், பிறகு அரசில் இருந்து பிரிக்கப்பட்டு, அதே அரசால் திரும்பப் பெறப்படுவதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும்.” எனவு கூறியுள்ளார் ஷா பைசல்.

ஷா பைசல்:

ஷா பைசல் 2010 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் கேடரின் 2010 ஐஏஎஸ் பேட்ச்சின் டாப்பர் ஆவார்.  அவர் 2019 இல் ஐஏஎஸ் சேவையிலிருந்து ராஜினாமா செய்து அவரது சொந்த அரசியல் கட்சியை உருவாக்கினார்.  2022 இல், ஷா பைசல் மத்திய சுற்றுலா அமைச்சகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com