
மோசடிக்காரர் என நாடளவில் பிரபலமான சுகேஷ் சந்திரஷேகர் தற்போது தலைநகரில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 16ம் தேதி பண மோசடி வழக்கில், அமலாக்கத் துறையினரால் கைதாகிய சுகேஷ் சந்திரஷேகர் முன்னாள் ரெலிகேர் விளம்பரதாரர் மல்விந்தர் சிங்கின் மனைவியை, மத்திய உள்துறை மற்றும் சட்டச் செயலாளர்களாகக் காட்டிக் கொண்டு பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டபட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஜாக்குலின் பெர்ணான்டஸ் துபாய் செல்ல அனுமதி..!
14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரஷேகர் அறையை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கிருந்த பல ஆடம்பர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஜீன்ஸ்
என பலவை பறிமுதல் செய்யப்பட்ட போது, சோகத்தில் சுகேஷ் கண்கள் கலங்கி அழுதுள்ளார். அவர் அழுத சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரலாக பரவி வருகின்றன.
தனது கண் முன்னே தான் விரும்பிய பிரம்மாண்ட மற்றும் ஆடம்பர பொருட்கள் மூட்டை போல குவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகேஹ்ச் தனது இயலாமையால் அழத்தொடங்கியுள்ளார்.
அதிகாரப்பூர்வ அனுமதியின்றி இதன் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டவரகள் குறித்து பேசிய அதிகாரிகள், யார் இந்த வீடியோவை வெளியிட்டது என தெரிந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜாக்லின் ஃபெர்னாண்டஸ் வழக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறி வி.கே.சசிகலா குழுவிற்கு இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தது என இரண்டு வழக்குகள் அவர் மீதுள்ள நிலையில், மல்விந்தர் சிங் சகோதரரான சிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங் போல நாடகமிட்டு சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சிறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பர பொருட்களைப் பார்த்து கண்ணீர் விடும் சுகேஷை ஒரு சிலர் கேலி செய்தும், ஒரு சிலர் பரிதாபப்பட்டும் பதிவிட்டு வருகின்றனர்.