பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டத்தில் உள்ளது. டாஹோமா என்ற கிராம். இந்த கிராமத்தில் பாபுலால் என்ற நபர் தந்து மனைவி மகன், மருமகள் என்ன குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். பழங்குடியின இனத்தை சேர்ந்த இவர்களின் குடும்பத்தில் 6 பேர் இருந்துள்ளனர்.
அந்த ஊரில் சில தினங்களுக்கு முன்னர் நகுல் குமார் என்பவற்றின் குழந்தை திடீர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளது. மேலும் தொடர்ந்து இதே பணியில் பல மர்ம சாவுகள் நடந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அந்த கிராம மக்கள் மருத்துவமனைக்கோ, அல்லது அறிவியல் பூர்வமான காரணங்களையோ தேடவில்லை. வழக்கம் போல ஏதோ ஒரு சாமியாடியிடம் தான் சென்றுள்ளன.
அந்த சாமியாடி அவர்கள் கொடுத்த காணிக்கையை பெற்றுக்கொண்டு குறி சொல்வதுபோல நடித்து “இந்த ஊரில் ஒரு குடும்பம் மாத்ரீக செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் தொடர்ந்து வருகின்றது” என சொல்லியிருக்கிறார்.
இதனால் யார் அந்த குடும்பம் என்று ஊர்க்காரர்கள் தேடத்துவங்கியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு பாபுலால் குடும்பத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் நிச்சயம் இந்த மாதிரியான மாந்திரீக காரியங்களில் ஈடுபடுவார்கள் என முட்டாள்தனமாக யோசித்துள்ளனர் அந்த ஊர்மக்கள்.
சம்பவத்தன்று இரவு 12 மணியளவில் பாபு லால் வீட்டிற்கு ஆயுதங்களோடு நகுல் குமார் தலைமையில் சுமார் 50 -பேர் வந்துள்ளனர். வந்தவர்கள் அவர்களிடம் பேசவோ ஏன் இந்த சந்தேகம் குறித்து கேட்கவோ கூட இல்லை. மூட நபிக்கையில் மூழ்கி இருந்த இந்த அரக்கர்கள் கொடூரமாக தாக்கியதில் நிலைகுலைந்த குடும்பம் எப்படியோ அவர்களின் இளைய மகன் சோனுக்குமாரை மட்டும் காப்பாற்றி தப்புவித்துள்ளது. இந்த கோர தாக்குதலில் இறந்த 5 பேரில் உடல்களை ஊருக்குள் பெட்ரோல் ஊற்றி எரித்து, 40000 ரூபாய்க்கு ஒரு டிராக்டரை வாடகைக்கு பிடித்து அந்த எறிந்த சடலங்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் போட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கிறது அந்த கும்பல்.
உயிர்தப்பிய சோனுக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை விசாரணையில் இந்த கொடூரம் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது. நகுல் குமார் உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.