``உச்ச நீதிமன்றத்தின் பச்சை கொடி.." 2வது திருமணம் செய்த காஷ்மீர் முதலமைச்சர்.. 56 வயதில் புதிய வாழ்க்கை.. மணப்பெண் போட்ட cool பதிவு!

திருமணம் முடிந்த அடுத்த நாளே, முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Green signal from the Supreme Court.." Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time.. New life at 56.. Bride's cool post!
``உச்ச நீதிமன்றத்தின் பச்சை கொடி.." 2வது திருமணம் செய்த காஷ்மீர் முதலமைச்சர்.. 56 வயதில் புதிய வாழ்க்கை.. மணப்பெண் போட்ட cool பதிவு!
Published on: 
Updated on: 
2 min read

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்து கொண்டதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிதி ரஸ்தானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ஓமர் அப்துல்லா, “நேற்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்கியது!” எனக் குறிப்பிட்டு நிதி ரஸ்தானையும் அதில் ‘டேக்’ (Tag) செய்துள்ளார்.

அதேபோல நிதி ரஸ்தானும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “இட்ஸ் டன், புரோ!” (It’s done, bro) என்று ஓமர் அப்துல்லாவை டேக் செய்து, கலகலப்பாகத் தனது திருமணத்தைச் உறுதிப்படுத்தியுள்ளார்.

Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time
Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time

திருமணம் முடிந்த அடுத்த நாளே, முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்... புதிய தொடக்கமும்!

ஒமர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி பாயல் அப்துல்லாவுடனான விவாகரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த மூன்று மாதங்களிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள ஒபராய் ஹோட்டலில் பணியாற்றியபோது சந்தித்த ஓமர் அப்துல்லாவும் பாயலும் கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜாஹிர், ஜமீர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time
Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time

கடந்த 2009-ம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், 2011-ல் தங்களின் பிரிவை ஓமர் அப்துல்லா பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ஓமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 31, 2026 அன்று, ஓமர் அப்துல்லா மற்றும் பாயல் இருவருமே பரஸ்பரம் சம்மதித்துத் தங்களது திருமண உறவை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்ததாகவும், வழக்கையெல்லாம் வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் அவர்களின் விவாகரத்துக்கு ஒப்புதல் அளித்தது.

விசாரணையின் போது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வேண்டி இருவரும் மனு தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இருவர் சார்பாகவும் ஆஜராகி நீதிமன்றத்தில் இதற்கான விவரங்களைச் சமர்ப்பித்தார்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகத் தனித்தனியாக வாழ்ந்து வந்ததை உச்ச நீதிமன்றமும் தனது விசாரணையின் போது சுட்டிக்காட்டி விவாகரத்து வழங்கப்பட்டது. இப்போது தனது 56 வயதில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள ஒமர் அப்துல்லாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

"Green signal from the Supreme Court.." Jammu & Kashmir Chief Minister marries for the 2nd time.. New life at 56.. Bride's cool post!
4 மாநிலங்களில் MLC தேர்தல்.. ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ்.. பகடி செய்த PM மோடி! ஆனால் சொந்த தொகுதி வாரணாசியில் வந்த பின்னடைவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.