இன்று முதல் இரவிலும் ரசிக்கலாம்... பல மாதங்களுக்குப்பின் திறக்கப்படும் தாஜ்மஹால்...

இன்று முதல் இரவிலும் ரசிக்கலாம்... பல மாதங்களுக்குப்பின் திறக்கப்படும் தாஜ்மஹால்...

வரலாற்றுப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க, இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
Published on

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது தாஜ்மஹால். பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள, வரலாற்றுப் புகழ் வாய்ந்த காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹால், இரவு நேரத்தில் நிலவொளியில் மின்னுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை ரசிக்க ஏராளமானோர் வருவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி இரவு முதல் பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல், இரவு நேரத்தில் மூன்று பிரிவுகளாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும், தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான டிக்கெட்டை ஆக்ரா மால் சாலையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com