
"கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்" என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை கழுவி சுத்தம் செய்து நறுமண கலவை சுவர்களில் பூசப்பட்டது.
ஆண்டு தோறும் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனி வார ஆஸ்தானம், உகாதி ஆகிய நாட்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமையில், கோவில் வளாகம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு, நறுமண கலவை பூசுவது வழக்கம். அந்தவகையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகிற 7ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி இன்று கோயில் கருவறை, வளாகம், துணை கோயில்கள், பிரசாத தயாரிப்பு கூடம், தங்க கோபுரம் உள்ளிட்ட பகுதிகளும், பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் சந்தனம், நாமக்கட்டி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் கொண்டு தயார் கலவை கோயில் சுவர்களுக்கு பூசப்பட்டது.