இறந்து போனவர் உயிருடன் வீடு திரும்பினார்: ஆந்திராவில் சுவாரஷ்யம்

இறந்து போனவர் உயிருடன் வீடு திரும்பினார்: ஆந்திராவில் சுவாரஷ்யம்
Published on
Updated on
1 min read

ஆந்திராவில் இறந்ததாக கூறப்பட்ட மூதாட்டி 18 நாட்களுக்கு பின் உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த முத்யாலா கடாயா என்பவர், கடந்த மாதம் 12ம் தேதி, கொரோனா பாதித்த தனது மனைவியை விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அதன்பின் கடந்த 15ம் தேதி, அவரது மனைவி இறந்துவிட்டதாக கூறி, ஒரு சடலம் ஒன்றை மூடிய நிலையில் மருத்துவர்கள் கடாயாவிடம் கொடுத்தனர். அந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இரு தினங்கள் கழித்து அவரது மகனும் கொரோனாவில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆன்மா சாந்தி அடைய கடந்த 1ம் தேதி கடாயா பூஜைகளை நடத்தினார். இந்தநிலையில்  கடாயாவின் மனைவி கிரிஜம்மா திடீரென வீடு திரும்பியுள்ளார். இதைக்கண்டு பலர் அதிர்ச்சியடைந்தனர். விசாரித்ததில் கிரிஜம்மா  என கூறி மருத்துவமனையில் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com