மனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை போன்று வீடு கட்டி பரிசளித்த கணவன்...

உலக அதிசயமான தாஜ்மஹாலை போன்று வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்துள்ளார்
மனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை போன்று வீடு கட்டி பரிசளித்த  கணவன்...
Published on
Updated on
1 min read

 மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணவர் ஒருவர். காதல் சின்னம் என்றால் தாஜ்மஹால் தான் அனைவருடைய நினைவுக்கு வரும். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவர் தனது மனைவிக்கு தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பேசுகிறார். அதாவது புர்கான்பூரில் உள்ள தப்தி ஆற்றின் கரையில் தாஜ்மஹாலை கட்ட ஷாஜகான் திட்டமிட்டதாகவும், ஆனால் பல காரணங்களால் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுவதை சுட்டிக்காட்டும் அவர், தன் மனைவிக்கு புர்கான் பூரில் தாஜ்மஹாலை கட்டி ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமையாக கூறுகிறார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com