
உத்தரபிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் 3 அமைச்சர்கள் உள்பட 11 பாஜக எம்.எல்.ஏ-கள் அக்கட்சியை விட்டு வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அங்கு அரசியல் பரபரப்பு உச்சக்கத்தை எட்டியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத் தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த 3 நாட்களில் 3 அமைச்சர்கள் உள்பட 11 பாஜக எம்.எல்.ஏ-கள் அக்கட்சியை விட்டு வெளியேறி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நரேஷ் சைனி, சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரி ஓம் யாதவ் ஆகியோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.