"ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியவர்கள் திமுகவினர்"...! நிர்மலா சீதாராமன் பேச்சால் வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள்..

"ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியவர்கள் திமுகவினர்"...! நிர்மலா சீதாராமன் பேச்சால்  வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள்..
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கப்படுத்திய போது சிரித்த திமுகவினர், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுவதாகவும் விமர்சித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என நிர்மலா சீதாராமன் கூறினார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகியுள்ளது என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது  நிர்மலா சீதாராமன் பேசுவதை கண்டித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், என்சிபி,  உள்ளிட்ட எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com