
நாக்பூரில் நடைபெறும் 108-வது அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
108 வது அறிவியல் மாநாடு:
ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பல்கலைகழகத்தில் நடைபெறும் 108-வது அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
உரையாற்றிய மோடி:
அதன் பின்னர் பேசிய மோடி, விஞ்ஞானம் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இந்தியா வளர்ச்சி பெறுகிறது என்றார். மேலும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவை மக்களுக்கு பயன்படாவிட்டால் எந்த பயனும் இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.