தவறை தட்டி கேட்ட பள்ளி முதல்வருக்கு நேர்ந்த சோகம்..! மாணவரின் வெறிச்செயல்...!

உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு...
தவறை தட்டி கேட்ட பள்ளி முதல்வருக்கு நேர்ந்த சோகம்..! மாணவரின் வெறிச்செயல்...!
Published on
Updated on
1 min read

உத்திர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜஹாகிராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி முதல்வரை நேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளான். 48 வயதான பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, வெள்ளிக்கிழமையன்று, 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் பள்ளியில் சண்டையிட்டு கொண்டுள்ளனர். அதற்கு பள்ளி முதல்வர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்த மாணவர், நேற்று காலை 8 மணியளவில் பள்ளி அலுவலகத்துக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது அந்த மாணவன் இரண்டு முறை வயிற்றில் சுட்டுள்ளார். 

பின்னர் அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்ததையடுத்து அந்த மாணவன் தப்பியோடியுள்ளான். இதனையடுத்து அவர், சீதாபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய மாணவனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com