
மக்களுக்கு இலவச ரேசன் மற்றும் தடுப்பூசி வழங்கப்படுவது சிறந்த ஆளுமைக்கான அடையாளம் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தீவிர முனைப்புடன் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில், பரூக்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், தங்களது ஆட்சியில் மக்களுக்கு இலவச ரேசன் மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது சிறந்த ஆளுமைக்கான அடையாளம் எனக் கூறினார்.
ஆனால், பகுஜன் சமாஜ் அல்லது சமாஜ்வாடி ஆட்சியில் இருந்திருந்தால், மக்களின் வரிப்பணம் அவர்களது சொந்த வங்கி கணக்கிற்கு சென்றிருக்கும் என விமர்சித்தார்.