கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவு!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவு!!

கேரளாவில் இம்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்து வருகிறது.
Published on

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியது.

பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

கேரளாவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 251.8 மில்லி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மில்லி.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட மிகவும் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com