குத்துச்சண்டை போட்டியில் நாக் அவுட்டாகி உயிரிழந்த இளைஞர்!!

குத்துச்சண்டை போட்டியில் நாக் அவுட்டாகி உயிரிழந்த இளைஞர்!!

குத்துச்சண்டை போட்டியில் நாக் அவுட் ஆன இளைஞர் போட்டி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Published on

பெங்களூருவில் ஜூலை 10ஆம் தேதி மைசூரைச் சேர்ந்த கிக்பாக்ஸர் ஒருவர் போட்டியில் நாக் அவுட்டாகி உயிரிழந்தார்.

கர்நாடக கே1 அசோசியேஷன் நடத்திய கிக் பாக்ஸிங் போட்டியில் மைசூரை சேர்ந்த கிக்பாக்ஸர் நிகில் என்பவர் பங்கேற்றார். அவரின் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் ரிங்கில் இருந்தபோது நாக் அவுட் ஆகிய நிலையில் திடீரென மயங்கி சரிந்தார். அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் போட்டி நடைபெறும் இடத்தில் எந்தவித மருத்துவ வசதியும் ஏற்படுத்தவில்லை என்றும் இதனாலேயே மகன் உயிரிழந்ததாகவும் நிகிலின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com