எம் எல் ஏக்களை பேரம் பேசியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு...!!!

எம் எல் ஏக்களை பேரம் பேசியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு...!!!
Published on: 
Updated on: 
1 min read

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து சஞ்சல்குடா சிறையில் அடைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சைபராபாத் போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ராமச்சந்திர பார்தி என்ற சதீஷ் சர்மா, நந்த குமார், சிம்மயாஜி சுவாமி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com