இந்த நிலையில் பாலின மாற்றத்திற்காக சில மாதங்களாக அனன்யா சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு சிகிச்சைக்கு பின் பாதிப்புகள் ஏற்பட்டது. நடக்க முடியாத நிலையில் வலியால் வேதனைப்பட்டு, பணிகளை கவனிக்க முடியாமல் சிரப்பட்டு வந்தார். அறுவைசிகிச்சையின்போது நடந்த தவறால் கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் அனன்யா.