பல்லியை விரட்ட போய் பலியான இரட்டை சிறுவர்கள்…  

பல்லியை விரட்ட போய், இரட்டையர்களான சிறுவர்கள்  25வது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
பல்லியை விரட்ட போய் பலியான இரட்டை சிறுவர்கள்…   
Published on
Updated on
1 min read

பல்லியை விரட்ட போய், இரட்டையர்களான சிறுவர்கள்  25வது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

காஜியாபாத், சித்தார்த் விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 14 வயதான இரட்டையர்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவும், இருவரும் வீட்டில் போக்குக்காட்டிக்கொண்டிருந்த பல்லியை விரட்ட முற்பட்டுள்ளனர். இதற்கென பால்கனியில் மேஜையை போட்டுக்கொண்டு, அதற்கு மேல் இருக்கையை வைத்து அதில் ஏறி சுவரில் இருந்த பல்லியை விரட்டியதாக தெரிகிறது. இதில் நிலைத்தடுமாறி இருவரும் 25வது மாடியிலிருந்து கீழே விழுந்தனர்.

சம்பவம் நடந்த போது, சிறுவர்களின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஆபத்து மிகுந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com