
தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 -ஆக அதிகரித்துள்ளது.
இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலையில் கிறிஸ்டல் , செல்லுலாய்ட்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
2025 ஜூன் 30, காலை சுமார் 9:20 மணியளவில் பசம்யலாரம் மருத்துவத் தொழிற்சாலையில் ஸ்ப்ரே டிரையர் பிரிவில் ஒரு பாய்லர் பெரும் சப்தத்தோடு வெடித்து சிதறியது. ரசாயன ஆலை என்பதால் அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் வெடித்த உடனே ஊழியர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டனர். இந்த கோரா விபத்தில் சம்பவ இடத்திலே 5 ஊழியர்கள் பலியானார்கள்.மேலும் இந்த தொழிற்சாலையின் துணை தலைவரான எல்.எஸ்.கோஹன் நேற்று காலையில் தனது காரில் ஆலை வளாகத்துக்குள் வந்த நேரத்தில்தான்இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் அவரது காரும் தூக்கி எறியப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கோஹன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
“இரவு முழுவதும் சுமார் 20 உடல்களின் டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மாதிரிகளைச் சேகரித்து, சேமிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டவுடன், உடல்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்” என்று பட்டன்சேரு பகுதி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.
அஹமதாபாத் விமான விபத்து நிகழ்ந்து சில தினங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.