இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை சாத்தியமா?

உலகளாவிய கல்வி தரத்தை மாணவர்களுக்கு வழங்கவும் மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை அதிகரிக்கவும் ஒரே சீருடை திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை சாத்தியமா?
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் ஒரே சீருடைகளை அமல்படுத்துதல் தொடர்பான பொதுநல வழக்கை  ஏற்க உச்ச நீதிமன்றம்  மறுத்து விட்டது. நிகில் உபாத்யாய் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒரே மாதிரியான சீருடைகளை அணிய உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில் உலகளாவிய கல்வி தரத்தை மாணவர்களுக்கு வழங்கவும் மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை அதிகரிக்கவும் ஒரே சீருடை திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை நீதிபதிகள் ஏற்க மறுத்து அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக கூறினர். .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com